108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கான வேலை வாய்ப்பு முகாம்


இடம்:  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை
நாள்:  04.11.23
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை


மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்


பிஎஸ்சி நர்சிங், அல்லது ஜி என் எம், DMLT(12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது கீழே குறிப்பிட்டுள்ள அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும், Zoology, Botany, Bio Chemistry, Micro Biology, Biotechnology.


வயதுவரம்பு:  19 இல் இருந்து 30 வயதுக்குள்  இருக்க வேண்டும்


மருத்துவ உதவியாளருக்கான மாத ஊதியம்: Rs 15,435 


தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மனிதவளத்துறை தேர்வு.


ஓட்டுநருக்கான அடிப்படை தகுதிகள்:



பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் Badge பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு : 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.


உயரம்: 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்


அனுபவம்: வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று மூன்று வருடங்கள் குறையாமல் இருக்க வேண்டும் மற்றும் Badge பெற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.


மாத ஊதியம்: Rs 15,235/-


தேர்வு முறை: எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை  நேர்காணல், சாலை விதிகளுக்கான தேர்வு மற்றும் கண் பார்வை திறன் தேர்வு.


இதில் இலவச தாய் சேய் நல வாகன ஓட்டுனர்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்படும் (FHS/JSSK).


மேலும் விவரம் அறிய: 04428888060, 04428888077, 04428888075.


 


திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்காணல் நவ-4 மற்றும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது


108 அவசர வாகனத்தில் மருத்துவ உதவியாளர். மற்றும் ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு நேர்கானல் வரும் நவ-4ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும். நவ-5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை பூந்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நேர்காணல் நடைபெற உள்ளது.


மேலும் விவரங்களுக்கு 7397444141, 8754435247, 7397724812 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்


காஞ்சிபுரம் இளைஞர்களே வேலை இல்லையா..? வேலைவாய்ப்பு முகாம் எங்கு நடக்கிறது தெரியுமா?


தமிழ்நாடு அரசு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் 04.11.2023 அன்று நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.


செய்ய வேண்டியது என்ன ?


18 முதல் 35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 04.11.2023  அன்று காலை 9.00 மணிக்கு வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நேரில்  வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-27237124 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.