மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் மற்றும் பிற மாநில செயலாளர் உடனான ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.


பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ;


இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியதை மக்களிடையே எடுத்து சென்று பிரச்சரம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்டக்கழக செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


தினந்தோறும் கொலை - கொள்ளை சம்பவங்கள்


டிவியில் தினந்தோறும் தங்கம் விலை நிலவரத்தை பற்றி பார்ப்பது போல, தமிழகத்தில் தினந்தோறும் கொலை கொள்ளை சம்பவங்கள் பற்றிய செய்திகள் தான் ஒளிபரப்பு ஆக்கப்பட்டு வருகிறது என்றும், அந்த அளவுக்கு தமிழகத்தில் தினந்தோறும் கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் மாநிலமாக தமிழக மாறி விட்டது.


கருணாநிதி புகழ் - உதயநிதி ஸ்டாலின் புகழ்


தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் , கருணாநிதியின் புகழ் பாடுவதையும், உதயநிதி ஸ்டாலின் புகழ் பாடுவதையும் அன்றாட நிகழ்வுகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, விலை வாசியை கட்டுப்படுத்துவதையோ, மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலோ கவனம் செலுத்துவதில்லை.


எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசின் மக்கள் விரோத போக்கையும், ஜனநாயக விரோத போக்கையும் மக்களிடையே எடுத்துச் சென்று சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும்.


திமுகவின் கூட்டணி பலம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்


2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் போது அக்காட்சியில் உள்ள பிரச்சனைகள் வெடிக்கும். மேலும் தேர்தல் நேரத்தில் தான் திமுகவின் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை கடந்த கால வரலாற்றை பார்த்து புரிந்து கொள்ளலாம்.


ஜெயலலிதா வழக்கு - சீமான் வரலாற்றை பார்க்க வேண்டும்


சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட வரலாற்றை சீமான் தெரிந்து கொள்ளாமல், பேசுவதாக கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்ட வல்லுனர்களை வைத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விவரங்களை சீமான் தெரிந்து கொள்வது நல்லது.


தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை


அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையெல்லாம், முடக்குவதும், ஸ்டிக்கர் ஒட்டுவதையே ஸ்டாலின் அரசு குறிக்கோளாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே தமிழத்தில் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.