தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை, கடலூருக்கு புது எஸ்.பி.
கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கிரண் ஸ்ருதி நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்த எஸ்.பி. தீபா சத்யன் சென்னையில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் எஸ்.பி. -யாக இருந்த சக்தி கணேசன் மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ராஜாராம் (முன்னதாக கொளத்தூர் துணை ஆணையராக பொறுப்பு வகித்தவர்.)நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக ரவளி ப்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிட மாற்றம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு இன்று (பிப்ரவரி 3 ஆம் தேதி) உத்தரவு பிறப்பித்தது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் வாசிக்க..
LEO vs Vikram: விக்ரம் படத்துடன் கனெக்ட் ஆகிறதா லியோ..? இதுதான் காரணம்..!