சென்னை - மதுரை - சென்னை இடையே, 8 புறப்பாடு விமானங்கள், 8 வருகை விமானங்கள், மொத்தம் 16 விமானங்கள் தினமும் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், இனிமேல் 3 புறப்பாடு விமானங்கள், 3 வருகை விமானங்கள், 6 விமானங்களாக குறைக்கப்பட்டுள்ளன. இதுவரை தினமும், சென்னை - திருச்சி - சென்னை இடையே, தினமும் 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள், மொத்தம் 12 விமானங்கள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், இனிமேல் 2 புறப்பாடு விமானங்கள், 2 வருகை விமானங்கள், மொத்தம் 4 விமானங்களாக குறைக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் - Indigo Airlines flight

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னை- திருச்சி இடையே, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில், தினமும் 6 விமானங்களையும், அதைப்போல் திருச்சி-சென்னை இடையே 6 விமானங்களையும், மொத்தம் 12 ஏ..டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்களை, நேற்று வரை இயக்கி வந்தது. 

அதைப்போல் சென்னை- மதுரை இடையே, தினமும், காலையிலிருந்து இரவு வரை, 8 விமானங்களும், மதுரையில் இருந்து, சென்னைக்கு 8 விமானங்களும், மொத்தம் 16 ஏ.டி.ஆர் சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. 

Continues below advertisement

ஏ.டி.ஆர் ரக சிறிய விமானங்கள் 

இந்தநிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், நேற்று திங்கட்கிழமை இரவுடன், திருச்சி, மதுரைக்கு இயக்கப்படும் அனைத்து, ஏ.டி.ஆர் ரக சிறிய விமானங்களையும் ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக, இன்று முதல் திருச்சி, மதுரைக்கு பெரிய ரக விமானங்களான, ஏ-20.என், என்ற விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.

இந்த பெரிய ரக விமானங்களில் ஒரே நேரத்தில் 180 லிருந்து 184 பயணிகள் வரை பயணிக்க முடியும். அதோடு ஏ.டி.ஆர் சிறிய விமானங்களில், எக்னாமி என்ற சாதாரண சீட்டுகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போதைய பெரிய ரக விமானங்களில், பிசினஸ் கிளாஸ், முதல் வகுப்பு இருக்கைகள் மற்றும் சாதாரண இருக்கைகளும் இருக்கும். 

3 விமானங்கள் மட்டும் இயக்கம் 

சென்னை- திருச்சி இடையை, காலை 9.10 மணிக்கும், மாலை 4.30 மணிக்கு இரண்டு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. அதைப்போல் திருச்சி- சென்னை இடையே, பகல் 11.45 மணிக்கு, இரவு 7 மணிக்கும் 2 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னை மதுரை இடையே, காலை 6.10 மணி, பகல் 12.15 மணி, இரவு 8.05 ஆகிய 3 விமானங்களும், மதுரை- சென்னை இடையே, காலை 9.20 மணி, மாலை 3.25 மணி, இரவு 11.30 மணி ஆகிய 3 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 

இந்த புதிய முறையை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், இன்று முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து செயல்படுத்த தொடங்கியுள்ளது. ஆனால் இது சோதனை அடிப்படையில் நடப்பதாகவும், இம்மாதம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை, இந்த முறையை செயல்படுத்தி பார்த்துவிட்டு, பயணிகள் வரவேற்பை பொறுத்து, தொடர்ந்து நீடிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.