காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் முன்னாள் இயக்குனரும் அறிவியல் விஞ்ஞானியுமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், சக்திவேல், பாலாம்பிகா சக்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு வியந்து பாராட்டினார்
செய்தியாளர்கள் சந்திப்பில், பள்ளி குழந்தைகள் பருவ நிலைக்கு ஏற்றாற் போல மண்ணின் தன்மையை பொறுத்து எந்த வகையான பயிர்களை பயிரிடலாம் விவசாயத்தில் அறிவியல் விஞ்ஞானத்தை பயன்படுத்தி எவ்வாறு புதுமைகளை மேற்கொள்ளலாம் என்றும் பள்ளிக் குழந்தைகள் தங்களின் விவசாயம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை இந்த கண்காட்சியில் செய்து காட்டியது வியக்கத்தக்கதாக இருந்தது எனவும் தெரிவித்தார்.
மேலும் உலகிலேயே ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று, உலகிற்கே உணவளிக்கும் விவசாய துறையில் அறிவியலின் பங்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளதாகவும் , விஞ்ஞானம் என்பது விவசாயம் முதல் விண்வெளி வரை அனைத்து துறைகளிலும், அறிவியலை சார்ந்து உள்ளதால், இதனை பள்ளி குழந்தைகள் புரிந்து கொண்டு எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறார்களோ, அதில் சிறந்தவர்களாக உருவாக முடியும் என்று கூறினார். சக்திவேல், பாலாம்பிகா சக்திவேல் உள்ளிட்ட கல்வியாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் அறிவியல் கண்காட்சியில் ,தமிழகம் முழுவதிலும் , இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க:உங்கள் மகனை இப்படி நடத்துவீர்களா? பயங்கரவாதி என அழைத்த பேராசிரியருக்கு இஸ்லாமிய மாணவன் சரமாரி கேள்வி..!
மேலும் படிக்க: Delhi murder case: டெல்லி கொலை வழக்கு: ஷ்ரத்தாவின் மோதிரத்தை புதிய காதலிக்கு பரிசாக அளித்த ஆப்தாப்: வெளியான திடுக் தகவல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்