கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் தங்ககுமார். அரியலூர் மாவட்டத்தில் தங்கி சிமென்ட் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அபிதா இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால், அபிதா அரியலூரில் இருந்து அங்கிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். சமீபத்தில் அரசு உத்தரவின்படி கல்லூரி திறக்கப்பட்டது இதனையடுத்து அமிதா கல்லூரிக்கு வந்துள்ளார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அபிதா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தினர். மாணவியிடம் விசாரித்தபோது தனக்கு படிக்க விருப்பமில்லை என்றும் பெற்றோர்கள், கட்டாயப்படுத்தியதால் கல்லூரிக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதுபற்றி கல்லூரி நிர்வாகம் அபிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அபிதாவின் பெற்றோர் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கல்லூரிக்கு வந்துள்ளனர். மதியம் அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசியுள்ளனர். அப்போது அபிதா மன வருத்தத்தில் இருக்கிறார். நாங்கள் பலமுறை கவுன்சிலின் கொடுத்தும் சரியாகவில்லை. எனவே நீங்கள் உங்கள் மகளை வீட்டுக்கு அழைத்துச்செல்லுங்கள் மன அழுத்தம் நீங்கி அவர் முழுமையாக குணமடைந்த பின்னர் மீண்டும் கல்லுரிக்கு அனுப்புங்கள் என்று கூறியுள்ளனர்.
இதனால் பெற்றோருக்கு வேறு வழியின்றி தங்களுடைய மகளை அழைத்துச் செல்வதாக ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மகளை வீட்டிற்கு செல்ல தயாராகுமாறு கூறியுள்ளனர். அப்பொழுது அபிதா பெற்றோரை இங்கேயே இருங்கள் நான் மேலேசென்று அறையில் உள்ள எனது கடமைகளை முடித்து விடுகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் ஐந்தாவது மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார்.
இதனைப் பார்த்த பெற்றோரும் கல்லூரி ஊழியர்களும் பதறியடித்துக்கொண்டு மாணவியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி அபிதா நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் வரைந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .