நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிந்ததும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 110ஐ தாண்டிவிட்டது. உக்ரைன் ரஷ்யா போரும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறதுகடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது.





 அதற்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலையும் நாடு முழுக்க குறைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் முடிந்து முடிவுகள் வரும்வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை இருந்தது.திடீரென கடந்த 14 நாட்களுக்கு முன் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.


அதன்பின் 2 நாட்கள் தவிர மற்ற 12 நாட்களும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 14 நாட்களில் 12வது தடவை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் விலை 110 மற்றும் டீசல் விலை 100 ஆகியவற்றைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் விலை 110 ரூபாய் 19 காசுகளும் டீசல் விலை 100 ரூபாய் 25 காசுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





இந்நிலையில் , செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரேஷ்குமார் மற்றும் கீர்த்தனா தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருமணம் என்றாலே வித்தியாசமான முறையில் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம் ஆனால் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை குறிக்கும் வகையில் மணமக்கள் இருவருக்கும் அவர்களுடைய நண்பர்கள் தலா ஒரு லிட்டர் பெட்ரோலை பரிசாக அளித்தனர்.


மணமக்களுக்கு பெற்றோர் பரிசாக அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தினம் தினம் தங்கத்திற்கு நிகராக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விண்ணைத் தொடும் அளவில் உயர்ந்து வருவதால் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசளித்து தாக நண்பர்கள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண