தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல், மே மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவியது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனை தொடர்ந்து முழு பொதுமுடக்கம் அறிவித்ததன் காரணமாக வைரஸ் தொற்று பரவும் குறைந்தது. தமிழகத்தில் மூன்றாவது அலை வராமல் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கும், கோவில்களில் அதிக அளவு பொதுமக்கள் கூடுவதற்கும் தடைவிதித்துள்ளது. அதேபோல மக்கள் அதிகம் நடமாடும் தெருக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 



கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை முறையாக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, சில மருத்துவ முறைகள் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வர நோயாளிகளுக்கு உதவுகிறது. தற்பொழுது கொரோனா வைரஸ் தொட்டியில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்காக இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என மருத்துவத் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு மூன்றாம் அலையை தடுக்கும்பொருட்டு தடுப்பூசி போடும் பணியை அதிகரித்துள்ளனர். அது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தமிழக அரசு செய்து வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலதரப்பட்ட பிரபலங்களும் தடுப்பூசி ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி தேசிய நெடுஞ்சாலை அருகில்  முரளி என்பவர் மதர் காபி கடை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட  சான்றிதழை, காட்டினாள் 25 ரூபாய் மதிப்புள்ள காபி 1 ரூபாய்க்கு வழங்கி வருகிறார் . ஒரு நபருக்கு வாரம் ஒருமுறை, என்ற கணக்கில் நான்கு வாரங்களுக்கு ஒரு ரூபாய்க்கு காபி வழங்கப்படுகிறது. 



இதுகுறித்து முரளி கூறுகையில்,  வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஒரு ரூபாபயையும்  நிவாரண நிதிக்கு கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு என்பது பொது மககள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு,  மூன்றாம் அலையை தடுக்கவே தனது நோக்கம் உள்ளது என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள், அதனால் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு ஒரு ரூபாய்க்கு காபி வழங்கி வருவதாக தெரிவித்தார்.

 

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு காபி வழங்கி வரும் முரளிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை  29 லட்சத்து 96 ஆயிரம் நபர்கள்கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 42 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X