1. சென்னை பெசன்ட் நகர் புனித தோமையார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை வைக்கப்பட்டது. இதில் பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதேபோல் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

 

2. சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அம்மா உணவகங்களுக்கு காய்கறி, மளிகை, சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்த வகையில், டியூசிஎஸ் கூட்டுறவு சங்கத்துக்கு மாநகராட்சி ரூ.26 கோடி நிலுவை வைத்துள்ளது.

 

 

3. காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் சீரமைக்கும் பணி நடைபெறுவதையொட்டி 4 விரைவு ரயில்கள் சனிக்கிழமையும், 16 ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

 

4. சென்னையில் இருந்து தில்லி சென்ற விரைவு ரயில் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த குளிா்பானத்தை கொடுத்து, திருடிய உத்தரகண்ட் இளைஞரை ஆா்.பி.எஃப் போலீஸாா் கைது செய்தனா்.

 

 

5. காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடு போன, 28 லட்சத்து, 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 217 மொபைல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

 

 

 

6. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான டி.ஆா்.பாலு ஆய்வு வெள்ளிக்கிழமை மேற்கொண்டாா்.

 

 

 

7. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பயிர் காப்பீட்டு திட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து, காப்பீடு பதிவு செய்ய முயன்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர்.

 

 

8. வெளிநாடுகளில் இருந்து, வேலூர் மாவட்டத்திற்கு வந்த, 100 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என, சுகாதாரத்துறையினர் தகவல்

 

 

9. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு காரைக்கால் துறைமுகத்திலிருந்து 1,014 மெட்ரிக் டன் யூரியா சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

 

10. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இறைச்சி கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.