1. சென்னை, காஞ்சிபுரம்‌ என மொத்தம் 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.



2. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தாயரித்து வழங்க, ஒப்பந்த நிறுவனங்களுக்கு, 'சிப்காட்' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது




3. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் நீர் நிலைகளில் இறங்கி தங்கள் உயிர்களை இழப்பது மட்டுமின்றி குடும்பத்தினரையும் மீளா துன்பத்தில் ஆழ்த்தும் செயல்களை தவிர்த்து அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.



4. காஞ்சிபுரம் மாவட்டத்தின் வருமான வரித் துறை சேவை மையத்தை அந்தத் துறையின் தலைமை ஆணையா் கீதா ரவிச்சந்திரன் நேற்று தொடக்கி வைத்தாா்.



5. ஸ்ரீபெரும்புதூர் அருகே ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் அடைந்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.



6. சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ஆயுதப்படையை சேர்ந்த 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



7. திருவள்ளூர் அருகே கணவர் இறந்ததால், மன உளைச்சலில் இருந்து வந்த தாய் மகளுடன் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




8. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மீட்பதற்கான விரிவான தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாராகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


9. செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே கடலூர் கிராமம் சத்திரம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (35).  தொடர் மழை காரணமாக வேலையில்லாததால் வீட்டில் இருந்த இவர், பாலாற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது கடலூர் சத்திரம்பேட்டை இடுகாடு அருகே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.


 





10. சிவசங்கர் பாபா மீது உள்ள பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் நீதிமன்ற காவல் முடிவடைந்து ஒட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.


 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்