1. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் நாளை காலை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்

 

2. வடகிழக்கு பருவமழை இன்று அதிகம் பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த மழைக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளன.

 



3. காஞ்சிபுரத்தில் கத்திகளுடன் திரிந்த மர்ம கும்பல், நான்கு பேரை வெட்டி, சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது.

 

 

4. கடந்த வாரம் பெய்த கன மழையால் தேங்கிய மழை நீரே பல இடங்களில் அகற்றப்படாத நிலையில், தற்போது அடுத்த கன மழை துவங்கியுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

 

 

5. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 711 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 711 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 151 ஏரிகள் 70%-100% ,  43 ஏரிகள் 50% - 75% , 3 ஏரிகள் 25% - 50% , 1 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 



6. இரண்டு நாட்களுக்கு தேவையான அத்தியாசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

 

 

7. ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக 2 தொழிலதிபர்கள் மீது நடிகை சினேகா சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



 

8. புழல் அருகே, வீட்டில் புகுந்து நகை திருடிய தாய், மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

 

 

9. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 200 வார்டுகளில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

 

 

10. சென்னையில் பரங்கிமலை, அடையாறு, தி.நகர் ஆகிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு, 20 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னை, துரைப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., பாபுராஜ், மீனம்பாக்கம் சிறப்பு எஸ்.ஐ., பரந்தாமன் உள்ளிட்ட, 20 பேர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.