வீட்டுத் தனிமையில் இருப்போருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வீடியோவாக வெளியிட்டுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்போருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வீடியோவாக வெளியிட்டுள்ளது.
வீட்டு தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டியவை
* காற்றோட்டமான தனி அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* தனி கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.
* உங்கள் அறைக்குள் மற்றவர்களை அனுமதிக்க வேண்டாம்.
* தொடர்பு இல்லாதவாறு உணவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
India Corona Case: டைட்டா இருந்து லைட்டா குறைந்து ஆறுதல் தரும் கொரோனா !
* நன்றாக சாப்பிட வேண்டும். போதிய அளவு தண்ணீர், பழரசம், இளநீர் குடிக்க வேண்டும்.
* தொற்று பாதித்தோர் பிறரிடம் நேரடியாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
* போதிய ஓய்வும், தூக்கமும் அவசியம் வேண்டும்.
* சோர்வு ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
* அடிக்கடி சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும்.
* மருந்துகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* நீங்கள் பயன்படுத்திய துணிகள் மற்றும் பாத்திரங்களை நீங்களே சுத்தம் செய்ய வேண்டும்.
* கழிவுகளை தனிப்பையில் அப்புறப்படுத்த வேண்டும்.
* பல்ஸ் ஆக்ஸிமீட்டர் அளவுகளை கண்காணிக்க வேண்டும்.
* உடல் வெப்பம் அளவுகளை கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.