கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது அதன்பின், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது இதனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத காரணத்தினால் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக மீண்டும் திறந்த பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது இதன் பின் மாணவர்களுக்கு நடக்கும் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படாமலே அனைத்து மாணவ மாணவிகளும் "ஆல்பாஸ்" என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது 2021-22 கல்வி ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் கடந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் நிலையே தொடர்கிறது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் அரசு பள்ளி மாணவர்களால் பொருளாதார சூழ்நிலை காரணமாக ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்ல இதனால் மாணவ -மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவ மாணவிகளுக்கு பாடங்களை எடுத்து கல்வி பயில வழி செய்து வருகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் மாணவர்களின் கல்வி கெட்டுவிடக்கூடாது என கடலூர் ஊராட்சி ஒன்றியம் களையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்களுக்கு கூரைவீட்டு திண்ணையில் பாடம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த பள்ளி ஆசிரியர்கள் ஊரில் உள்ள மாணவர்களை ஒன்று திரட்டி அந்த ஊரில் உள்ள ஒரு நீண்ட கூரை வீட்டு திண்ணையில் பாடம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஊரில் உள்ள மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாக அந்த பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் அதுமட்டுமின்றி மாணவ மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் குழுக்களை ஏற்படுத்தி சந்தேகங்களையும் மாணவ மாணவிகளின் ஆசிரியர்கள் தீர்த்து வருகின்றனர். இவ்வாறு செய்வதனால் மாணவர்களுக்கு மிகவும் பயன்படுவதாக பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழகத்தில் தொடர்ந்து கடலூர், விழுப்புரம், திருவண்ணா