வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் மறைமலைநகர் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் மழை எதிரொலியாக கூடுவாஞ்சேரி அடுத்துள்ள காயரம்பேடு ஏறி தனது முழு கொள்ளளவை எட்டி ஏரிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.
அதிகளவு உபரி நீர் ஒரே நேரத்தில் வெளியேறுவதால், கூடுவாஞ்சேரி அடுத்துள்ள பெருமாட்டு நல்லூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது, பெருமாட்டு நல்லூரில் உள்ள ராஜேஸ்வரி நகர், விஷ்ணு பிரியா நகர், பெருமாட்டு நல்லூர் மெயின் ரோடு, ஓம் சக்தி நகர், ஜெய் ஹனுமான் நகர், மகிஷாமத்தி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் புகுந்துள்ளது. இதே போல நெல்லிக்குப்பம் சாலையில் தண்ணீர் தண்ணீர் சாலையில் புரண்டு செல்வதால் சாலையில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் . கரைபுரண்டு ஓரம் வெள்ளத்தை உடனடியாக அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்
கூடுவாஞ்சேரி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் மறைமலைநகர் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் மழை எதிரொலியாக கூடுவாஞ்சேரி ஏரியில் நீர் வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது. இதன் காரணமாக கூடுவாஞ்சேரி ஏரி, வேகமாக நிரம்பி வருகிறது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் , தண்ணீர் விரைவில் நிரம்பி களங்கள் வழியாக வெளியேறும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுவாஞ்சேரி ஏரியிலிருந்து , ஷட்டர் மூலம் குறைந்த அளவு நீர் தற்பொழுது வெளியேற்றப்பட்டு வருகிறது.
கூடுவாஞ்சேரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படும்பொழுது, கூடுவாஞ்சேரியில் இருக்கும் நம் மகாலட்சுமி நகர், ஜெகதீசன் நகர், உதயசூரியன் நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் தேங்குவது தொடர் கரையாக இருந்து வருகிறது. எனவே இதுபோன்று எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக கூடுவாஞ்சேரியில், உள்ள மதகு வழியாக தண்ணீர் முதற்கட்டமாக திறந்து விடப்பட்டுள்ளது.
வானிலை அறிவிப்பு
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.