செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு குருவன்மேடு மற்றும் ரெட்டிப்பாளையம் பகுதிகளில் தரைப்பாலங்கள் உள்ளன. இந்நிலையில், குருவன்மேடு, ரெட்டிபாளையம் ஆகிய தரைப்பாலங்களை வெள்ளம் மூழ்கடித்து பாய்ந்தோடுகிறது. இதனால் குருவன்மேட்டிலிருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு வரும் பள்ளி மாணவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழையின்போதும் இந்த சாலை மழைநீரால் துண்டிக்கப்படுகிறது. தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதைத் தாண்டி மழைநீர் செல்கிறது. தற்போது மழை நீரால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 முதல் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரகடம் , பாலூர் போன்ற பகுதிகளுக்கு சென்று செங்கல்பட்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு கிராம மக்கள் பாதிக்காத வண்ணம் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
வானிலை தகவல்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.