Rain: காஞ்சிபுரத்தில் மிதமான மழை..! செங்கல்பட்டில் கனமழை..!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை நல்ல மழை பெய்துள்ளது.

Continues below advertisement

வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து காஞ்சிபுரத்தில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்நிலையில் திடீரென நேற்று மாலை முதல் காஞ்சிபுரத்தில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காஞ்சிபுரம் மாநகர பகுதிகளான ஓலிமுகமதுபேட்டை, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஓரிக்கை, செவிலிமேடு போன்ற பகுதிகளில் பரவலாகவும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழம்பி, தாமல், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போன்ற பகுதிகளிலும் வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் போன்ற இடங்களில் மிதமான மழை பொழிவும் காணப்பட்டு வருகிறது.  இதே போல செங்கல்பட்டு பகுதிகளிலும் காலை கன மழை பெய்தது.

Continues below advertisement


Rain Alert: மக்களே உஷார்..! வட கிழக்குப் பருவமழை மீண்டும் வெளுத்து வாங்குமா? டெல்டா, தென்மாவட்டங்களில் மழை

கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழைப்பொழிவைத் தந்து முடிவுக்கு வரும் என முன்னதாகக் கணிக்கப்பட்டது.


புதிய காற்றழுத்த தாழ்வு

நவம்பர் மாதம் முழுவதும் கணிசமாக பெய்து மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், டெல்டா மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நாளை முதல் பரவலாக மழை பெய்யும் என்றும், சென்னையில்  டிசம்பர் 3,  4 ஆம் தேதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உண்டாகும் என்றும்,  அடுத்த ஐந்து நாள்களுக்கு தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வடகிழக்கு பருவமழை:

மேலும், முன்னதாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நவம்பர் 17 முதல் 23 வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக இயல்பை விட பதிவாகியுள்ளது.

இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர் ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


kanchipura

30.11.2022 மற்றும் 01.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

02.12.2022 மற்றும் 03.12.2022:  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

04.12.2022: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Continues below advertisement