மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி, கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 253ஆக பதிவாகியுள்ளது.


மாணவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்


இந்நிலையில், சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்கள், மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


மேலும், காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்கள் மாநகராட்சி
சுகாதார நிலையங்களை அணுகி ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னையில் அதிகரிக்கும் கொரோனா


முன்னதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி, கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 253ஆக உள்ளது.


இந்நிலையில் முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்டு இந்தக் கல்வியாண்டு தொடங்கியுள்ள சூழலில் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி


சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியவர்கள் விழுக்காடு 99.72 ஆகவும், இரண்டாம் தவணை செலுத்தியவர்கள் 85.51 விழுக்காடாகவும் உள்ளனர். இந்நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தவிர, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற இணை நோய் உடையவர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட 11 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் 500ஐ கடந்த எண்ணிக்கை


கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதே போல் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது. 


கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 2,313ஆக உயர்ந்துள்ளது. 169 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


3 மாதங்களுக்குப் பின் தமிழ்நாட்டில் கொரோனா பலி


தவிர செங்கல்பட்டு மாவட்டத்தில் 129 பேருக்கும், கோவையில் 32 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும், திருவள்ளூரில் 30 பேருக்கும், கன்னியாகுமரியில் 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


மூன்றாம் அலை ஓய்ந்த பிறகு கரோனாவால் கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் இல்லாமல் இருந்துவந்த நிலையில், நேற்று (ஜூன்.15) தஞ்சாவூரைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு எவ்வித இணை நோயும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கொரோனா பரவல் நான்கு மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் தமிழ்நாட்டில் கரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.