சென்னை கிண்டி அடுத்துள்ள ஆலந்தூர், பருத்திவாக்கம் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் வாடகைக்கு வசிப்பவர் ரகு (30). இவர் மட்டும் இவரது மனைவி ரங்கம்மாள் ஆகிய இருவருக்கும் இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவியுடன் தினசரி வேலைக்கு செல்வது வழக்கம். மனைவி மற்றும் கணவன் ஆகிய இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையை பார்த்து காக்க மனைவியின் அம்மா மங்கையர்க்கரசி அவர்களுடன் சேர்ந்து வசித்து வருகிறார். தினமும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்ற பிறகு கைக்குழந்தையை மங்கையர்கரசி பராமரித்து வருகிறார். 

 



இந்நிலையில் நேற்று காலை 11 மணியளிவில் வீட்டில் இருந்த வாஷிங் மெஷினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிச்சியடைந்த மங்கயற்கரசி, உடனடியாக பேரக் குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். அவர் வெளியே வந்த சில நொடிகளில் வாஷிங் மெஷின் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதனைக் கண்ட மங்கையர்க்கரசி கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கூச்சலிட்டு உள்ளார்.



 

தீ விபத்து குறி தகவலறிந்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தண்ணீர் ஊற்றியும், மணலை போட்டும் தீயை அணைத்துள்ளனர். ஆனால், அதற்குள் வாஷிங் மெஷின் முழுவதுமாக எரிந்தது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த விலை உயர்ந்த துணிமணிகள், புத்தகங்கள் போன்றவை எரிந்து நாசமானது. மங்கயற்கரசி துரிதமாக செயல்பட்டதால் 2 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, முறையாக பராமரிக்காத துணி துவைக்கும் எந்திரத்தை பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பராமரிக்கப்படாத துணி துவைக்கும் இயந்திரம் நீண்ட நேரமாக, ஆன் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர். மேலும் வீட்டில் குழந்தை இருக்கும் பொழுது தனியாக விட்டுச் செல்வது குழந்தை ஆபத்து எனவும், எப்பொழுதும் வீட்டில் யாராவது ஒருவர் குழந்தையை பராமரிக்க வேண்டும் எனவும், காவல்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.