முன்னாள் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
 
முன்னாள் இந்திய ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் நேற்று மதியம் மாமல்லபுரம் வந்து பல்லவர்கள் செதுக்கிய கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, தயங்கி தயங்கி நின்ற பல்வேறு மாநில சுற்றுலா பயணிகளை அருகில் அழைத்து சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பொது மக்களிடம் எளிமையாக நடந்து கொண்டார்.
" உள்ளூர் பிரபல சுற்றுலா வழிகாட்டி பாலகிருஷ்ணன்"
 
அப்போது, மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ராம்நாத் கோவிந்துக்கு சுற்றுலா வழி காட்டியாக செயல்பட்டு, புராதன சின்னங்களின் வரலாறு, எந்த காலத்தில், எந்த மன்னரால் செதுக்கப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெளிவாக விளக்கிக் கூறினார். மேலும், கடற்கரை கோயில் முன்பு ராம்நாத் கோவிந்தும், சுற்றுலா வழிகாட்டி பாலகிருஷ்ணனும், தனியாக நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.
 
வீடு திரும்பும்பொழுது நடந்த கொடூரம்
 
இந்நிலையில், சுற்றுலா வழிகாட்டி பாலகிருஷ்ணன் நேற்று இரவு மாமல்லபுரத்தில் இருந்து பைக்கில் வெண்புருஷம் நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஐந்து ரதம் சாய்பாபா கோயிலுக்கு அருகே சென்றபோது, திடீரென பன்றி குறுக்கிட்டதால் நிலை தடுமாறி பன்றி மீது பைக் மோதியதில் பாலகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
 
இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் நேரில் வந்து பாலகிருஷ்ணனை மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக பாலகிருஷ்ணன் உடலை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி ராம் கோவிந்துக்கு வழிகாட்டியாக செயல்பட்ட சில மணி நேரங்களிலேயே சுற்றுலா வழிகாட்டி பாலகிருஷ்ணனின் பைக் பன்றி மீது மோதி பலியான சம்பவம் சுற்றுலா வழிகாட்டிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
 

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண