ஆமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் இரண்டு தொழிற்சாலைகளில் கார் உற்பத்தி செய்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் கார் உற்பத்தி செய்து வந்த ஃபோர்டு நிறுவனம், படிப்படியாக தனது கார் உற்பத்தியை குறைத்தது.
இந்தியாவிற்கு பாய் பாய்.. Ford India Exit:
இந்தியாவில் உள்ள இரண்டு ஆலைகள் மூலம் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது . இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, ஃபோர்டு தனது கடைசி காரை தயாரித்து, இனி இந்தியாவில் இருந்து வெளியேறுகிறோம் என அதிகாரம் பூர்வமாக அறிவித்தது.
மூடப்பட்ட சென்னை ஃபோர்டு தொழிற்சாலை:
இதனால் சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் செட்டில்மெண்ட் அறிவித்தது. பெரும்பாலான ஊழியர்கள் செட்டில்மெண்ட் தொகையை பெற்ற நிலையில், சில ஊழியர்கள் அதைப் பெற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் 725.7 கோடி ரூபாய்க்கு,கடந்த ஜனவரி மாதம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Year Ender 2024 Auto: முடிச்சுவிட்டீங்க போங்க..! 2024 உடன் உற்பத்தியை நிறுத்திய கார் மாடல்கள் - இதெல்லாமா? காரணம்?
முதலமைச்சர் வெளிநாட்டு பயணம்:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அதாவது 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
மீண்டும் ஃபோர்டு:
இதன் ஒரு பகுதியாக மூடப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தின்,அதிகாரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
இதையும் படிங்க: Year Ender 2024 Auto: 2024ல் அறிமுகமான தரமான மின்சார கார்கள்.. கம்மி பட்ஜெட்டில், அதிக ரேஞ்ச்? சிறந்த மாடல் என்ன?
ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும் ஃபோர்டு நிறுவனத்திற்கும் இருக்கும் நல்லுறவு ஆகியவை குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தொடர்பாக தமிழ்நாடு அரசும் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டிருந்தது. மீண்டும் உற்பத்தி தொடங்கும் என அறிவிப்பு வெளியானதில் இருந்து, எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த உடன் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் மாதம் மீண்டும் தொடங்குகிறதா ? Ford Reentry
ஆலையை இயக்குவது குறித்து, ஃபோர்டு நிறுவனத்துடன் அதிகாரிகள் தற்போது பேச்சு நடத்தி வருகின்றனர். வரும் மார்ச்சுக்குள் ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஃபோர்டு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன தகவல் வெளியாகி விட்டது.
மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்தால், அதில் பணி செய்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைக்குமா ? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் தொழிற்சாலை எப்படி செயல்பட உள்ளது என்ன கார்கள் தயாரிக்கப்பட உள்ளது, என்பது குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.