PTR Metro Travel :  தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். மெட்ரோ ரயிலில் பயணித்த  சக பயணிகளுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாடினார்.


2023ஆம் ஆண்டின் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 9ஆம் தேதி முதல் தொடங்கி தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடைசி நாளான இன்று ஆளுநருக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் முடிவடிவம் பெற்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இன்றும் கடந்த 9ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை அமர்வானது இன்றுடன் நிறைவடைந்தது.


ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கடந்த 9ஆம் தேதி சட்டப்பேரவை தொடங்கியது. அவர் தன் உரையில் பல வார்த்தைகளை விடுத்து பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை தமிழில் மொழிப்பெயர்த்து பேசினார். இதனையடுத்து இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே  ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டப்பேரைவில் இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பிடிஆர் மெட்ரோவில் பயணம்


இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று மெட்ரோவில் பயணித்துள்ளார். வெளியூர் சென்ற பழனிவேல் தியாகராஜன், இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். கடைசி நாளான இன்று சட்டப்பேரவையில் பங்கேற் தாமதம் ஆனாதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மெட்ரோ ரயிலில் பயணிக்க திட்டமிட்டார்.


இதனையடுத்து, சென்னை விமான நிலைய மெட்ரோவிலிருந்து ஓமந்தூரார் தோட்டம் வரை பயணித்த தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அங்கிருந்து அருகே உள்ள தலைமைச் செயலகம் வந்தடைந்தார். இந்த பயணித்தின்போது, மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகளிடம் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துரையாடினார். அவர்களிடம் மெட்ரோ பயணம் குறித்து குறைகளையும், கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.


கூடுதல் நேரம் இயக்கம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை நள்ளிரவு 12 மணி  வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் மிகு நேரங்களில்  அதாவது மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள், இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும், அனைத்து முனையங்களில் இருந்தும் செல்லும் கடைசி  மெட்ரோ ரயில் சேவை  இரவு 11 மணிக்கு பதிலாக  12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18ம் தேதி மட்டும்  அனைத்து முனையங்களில் இருந்தும்  புறப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக  காலை 4 மணி முதல் இயக்கப்படும். எனவே, ஜனவரி இன்று, நாளை மற்றும் 18ம்  தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.