ஈரோட்டில் அ.தி.மு.க. பேனரில் கூட்டணி பெயர் மாறி இருந்தது எழுத்துப் பிழை என மூத்த நிர்வாகிகள் தெரிவித்ததாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


பேனரில் கூட்டணி பெயர் மாற்றம் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். திமுகவை எதிர்க்க பொதுவாக ஒரு வேட்பாளர் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கையில் பேசியுள்ளார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் புதுடில்லி புறப்பட்டு சென்றார்.


முன்னதாக அவர் செய்தியாளர்களிடையே பேசியதன் விவரம்: 


ஈரோட்டில் ஆறு மணி நேரத்தில் கூட்டணி பெயர் பேனரில் மாறியது எழுத்துப்பிழை என்று நிர்வாகிகள் கூறியிருப்பதாக கூறினர்.வேட்பாளர் அறிவிப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


முன்னதாக ஈ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு அறிவிக்கப்பட்ட போது அதிமுக தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களில் காலையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் என்று இருந்தது. மாலை நேரத்தில் அவை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் என மாறி இருந்தது.மேலும் இரண்டு பேனர்களிலும் பா.ஜ.க.,தலைவர்கள் புகைப்படம் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வேட்பாளர் அறிவிப்பு 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை .” பாரதிய ஜனதா கட்சி மிக தெளிவாக சொல்லியிருக்கிறோம். இது எங்களுக்கான தேர்தல் இல்லையென்று. அதே நேரத்தில் வலுவான ஒரு வேட்பாளர், அசுர பலம், கொண்ட அதாவது, பணபலம் மிக்க, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு கொஞ்சமும் யோசிக்காத தி.மு.க.-அரசிற்கு எதிராக நிற்க வேண்டுமென்றால், வலிமையான வேட்பாளராக இருக்க வேண்டும். வலிமையான ஒரு வேட்பாளர் தி.மு.க.விற்கு எதிராக நிற்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு.  அது தொடர்பாக ஓரிரு நாளில் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.


டெல்லி பயணம் மேற்கொள்வதின் காரணம்:


நாளை டெல்லி செல்வது, இந்திய - இலங்கை ஒப்பதத்திற்கு பிறகு, அங்கு 13 -வது அரசியல் சட்டத்திருத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தமிழக பா.ஜ.க.-வின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்கவே டெல்லி செல்வதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.




மேலும் வாசிக்க..


கூட்டணி பெயர் மாற்றம்; இபிஎஸ் அணிக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பேன் - அண்ணாமலை அதிரடி