வேலூர் மாவட்ட தலைமை இடமாக வைத்து செய்யப்பட்டு வந்த நிதி நிறுவனம் நடத்தி வந்த IFS ( இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ்) என்ற நிதி நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8000 ரூபாய் வட்டி தரப்படும் என்று பல பேரிடம் பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் மூன்று இடங்களில் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.



 


இதே போல காஞ்சிபுரத்தில் முக்கிய பகுதியாக விளங்கும் பூக்கடை சத்திரம் பகுதியில் இயங்கி வந்த அலுவலகத்திலும் சீல் வைக்கப்பட்டது. மேலும் ஜெகன் என்ற மற்றொரு மேலாளர் ராணிப்பேட்டை, நெமிலி பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்றது. அவருடைய வீட்டிற்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் எம்.எம். அவென்யூ பகுதியில்,  சிவானந்தம் என்பவர் வீட்டிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.


21 இடங்களில் சோதனை.


தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை  நடத்தினர். இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் IFS என்ற கம்பெனி தொடர்பாக தமிழ் நாடு முழுவதும் நடந்த சோதனையில், 220 முக்கிய ஆவணங்கள், 13 ஹார்ட் டிஸ்க், 5 லேப்டாப், 14 செல்போன்கள், 40 சவரன் நகை மற்றும் ஒரு கோடியை 50 லட்ச ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


 



முதலீடு தொடர்பான தகவல்கள் வெளியாகின


ஐஎஃப்எஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் 79 ஆயிரம் பேரிடம் 4,383 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இதே போல் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 89 ஆயிரம் பேர் 1680 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதும், திருச்சியை சேர்ந்த Elpin -e-Com Ltd என்னும் நிறுவனம் சுமார் 5000 நபர்களிடமிருந்து 400 கோடி ரூபாய் முதலீடு பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிவித்துள்ளது. 3 நிறுவனங்கள் தொடர்பாகவும் 19 வழக்குகளை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  


காவல்துறை அறிவிப்பு


பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் விசாரணை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. eowlnsifscase@gmail.com ஆர்பிஐ இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் தங்கள் பணத்தை சேமிக்க/டெபாசிட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண