காஞ்சிபுரத்தில் இரட்டை எண்கவுண்டர்..! வெள்ளத்துரை அதிரடி..! நடந்தது என்ன ?

காஞ்சிபுரத்தில் வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் அதிரடியாக இரட்டை என்கவுண்டரில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

காஞ்சிபுரத்தில் நேற்று புதுப்பாளையம் என்ற பகுதியில்,  சரவணன் என்கிற  பிரபாகரன் ( 35 ) என்ற  பிரபல ரவுடி பட்டம் பகலில் 3 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த பிரபாகரன் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Continues below advertisement

 இந்த கொலை சம்பவத்தில் தொடர்பான ரகு மற்றும் ஆசான் என்கிற கருப்பு  ஆசான் ஆகியோர் காஞ்சிபுரம் புதிய ரயில்வே பாலம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது.  இருவரையும் கைது செய்ய வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கே சென்ற பொழுது குற்றவாளிகள் அங்கிருந்து தப்ப முயற்சி செய்தபோது காவல் துறையினரை மீது தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்  ராமலிங்கம் மற்றும் காவலர் சசிகுமார் ஆகிய இருவரும் அவர்கள் வைத்திருந்த சிறிய அரிவாள் கத்தியால் வெட்டப்பட்டதில் காயம் அடைந்தனர்.

இதனால் காவல்துறையினர் தங்களுடைய  தற்காப்புக்காக அவர்களை எச்சரிக்கை செய்து இருக்கின்றனர். இருந்தும் தொடர்ந்து அவர்கள் காவல்துறையினர் தாக்கியதால் காவல்துறையினர் மூன்று ரவுண்ட் சுட்டுள்ளனர் இதில்  குண்டடிப்பட்டு ரகு மற்றும்  கருப்பு ஆசான் ஆகியோர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இருவரும் உடலும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இருவரும் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்த என்கவுண்டர் சம்பவத்தை வெள்ளத்துரை தலைமையிலான போலீசார்  செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola