கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்திற்குள்ளாகியுள்ளது. நல்லவேளையாக இந்த ரயலில் பயணிகள் யாரும் இல்லை என்றும், ரயில் ஓட்டுநருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279 - மற்றவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதி வேகமாக வாகனங்களை இயக்குதல் ரயில்வே சட்டம் பிரிவு 151, 154 ஆகிய மூன்று பிரிவுகளில் ஓட்டுநர் பவித்திரன் மீது எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தநிலையில் ஓட்டுநர் பவித்திரனிடம் சென்னை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த நேரத்தில் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார். முதற்கட்ட விசாரணை அறிக்கைக்கு பின்பு ஓட்டுநர் பவித்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்