சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சாலை மையப் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க , திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  


இசிஆர் போக்குவரத்து நெரிசல்...


சென்னையின் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. திருவான்மியூர் முதல் அக்கறை வரை சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக உள்ளது. இப்பகுதியில்  போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‌


நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் திருவான்மியூரில் இருந்து, உத்தண்டி சுங்கச்சாவடி வரை சென்று வருகிறது. தொடர்ந்து வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த வாகன போக்குவரத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


ஆறு வழிச்சாலை திட்டம் ( Thiruvanmiyur to Uthandi Elevated Corridor )


எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, ஆறு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்து நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. நிலத்திற்கு இழப்பீடு வழங்க 778 கோடி ரூபாயும், சாலை விரிவாக்கத்திற்கு 174.92 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பணி இழப்பீடுத் தொகை வழங்குவது, உள்ளிட்ட பணி காரணமாக சாலை விரிவாக்கம் பணிகள் மந்தமாக நடைபெற்றது. 


ஓர் ஆண்டாக பணிகள் முழு வீழ்ச்சி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 10.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பட்டா போன்ற வகைப்பாடு இடங்களும் இடம்பெற்றுள்ளன. இழப்பீடு வழங்கும் பணி 95 சதவீதம் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றன. தற்பொழுது சாலை அகலப்படுத்தும் பணிகளும் முழு வெற்றி நடைபெற்று வருகின்றன. 


16 கிலோமீட்டர் மேம்பாலம்


கிழக்கு கடற்கரை சாலை மையப் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  டைட்டில் பார்க் சந்திப்பு முதல் எல்.பி சாலை முதல் கொட்டிவாக்கம் வரை சுமார் 300 கோடி ரூபாயில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த மேம்பாலத்தை திருவான்மியூர் ரயில் நிலையத்திலிருந்து, கேது கரைச்சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி வரை 16 கிலோமீட்டர் நீளத்திற்கு நீடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 


இதற்கான திட்ட மதிப்பீடு செய்வதற்கான நிதியும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட மேம்பாலத்தில் அக்கறை சந்திப்பில் ரவுண்டான அமைக்கப்பட்டு, கேகே சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் பழைய மகாபலிபுரம் சாலையை எளிதில் அடைய முடியும். எனவே தற்பொழுது திருவான்மியூர் முதல் அக்கறை வரை 6 வழி சாலை அகலப்படுத்தும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. 


பத்து நிமிடம் பயணம்..


தொடர்ந்து மேம்பாலம் அமைக்கப்பட்டால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகள் 6 மாதத்தில் நிறைவு பெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்பொழுது திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை வருவதற்கு 45 முதல் ஒரு மணி நேரம் வரை நேரம் எடுத்துக் கொள்கிறது. உயர்மட்ட மேம்பாலம் அமைந்தால் பத்து நிமிடத்தில் செல்ல முடியும் அதே போன்று எரிபொருள் மிச்சமாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.