ஆந்திர பிரதேசம் மாவட்டத்தில் திருப்பதியில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 புள்ளியாக பதிவானது. சென்னையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனை தேசிய நிலநடுக்க மையம் (National Center for Seismology (NCS))உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி, இரவு சரியாக 20:43:05 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. திருப்பதியில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான நிலநடுக்கம் என்பதால் பெரியளவிலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடகிழக்கு திசையில் 208 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இதில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்னும் தகவல் ஏதும் வெளியாகவில்லை.