Chennai Metro : சென்னையில் வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எளிதாக செல்லும் வகையில், எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை
சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சாலை வழியான பயணத்திற்கு மாற்றாக மெட்டோ ரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர். தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
புதிய வசதி
ஆனால் பயணிகள் மெட்ரோ ரயிலில் இருந்து வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்ல ஆட்டோக்கள், ஊபர், ஓலா போன்ற சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுடைய பயணத்தை எளிதாக்கும் விதமாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் எலக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை தொடங்கியுள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் 5 கிலோ மிட்டருக்கு இந்த சேவை வழக்கப்படுகிறது. இந்த சேவையை லெக்கோ (LEGG0) என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக ஆலந்தூர், செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் மதுரவாயில் என மொத்தம் 28 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாதம் முழுவதும் பயணிப்போருக்கு 20 சதவீத கட்டண சலுகையும், கூகுள்பே, போன்பே மூலம் செலுத்துவோருக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை கொளத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் வந்த வசதி
பயணிகள் டிக்கெட் எடுக்கும் வசதியை எளிமையாக்க ஏதுவாக புதிய வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே பயணிகளின் வசதிக்காக நேரடி பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும் முறை, பயண அட்டை, க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை ஆகியவைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதனைத்தொடர்ந்து சமீபத்தில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Cylinder Price: ஹாப்பி நியூஸ்.. சிலிண்டர் விலை அதிரடி குறைவு..! காரணம் என்ன தெரியுமா..?