முக்கிய தகவல் மக்களே.. மழை எதிரொலி.. சென்னை புறநகர் பகுதியில் சுரங்கப்பாதை துண்டிப்பு ...!
கிஷோர் | 24 Aug 2023 11:30 AM (IST)
" சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கன மழையால் சாலைகளிலும் சுரங்கபாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர் "
சுரங்கப்பாதைகளில் மழை
சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கன மழையால் சாலைகளிலும் சுரங்கபாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்
சென்னை ( Chennai News ): சென்னை புறநகர் பகுதிகளில் சில நாட்களாக காலை வெயில் சுற்டெறிக்கும் நிலையில் மாலை வேலைகளில் கனமழை பெய்து வருகிறது. அது போல் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், மீனம்பாக்கம், சேலையூர், வண்டலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்,
தொடர்ந்து தாம்பரம் ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கபட்டுள்ளது இதனால் கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் செல்லும் வாகன ஓட்டிகள் இரண்டு கிலோ மீட்டர் வரை சுற்றி செல்கின்றனர். மேலும் கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் குளம் தேங்கி நிற்பதால் பேருந்துகள் வெகு தூரம் நிறுத்திவைக்கபட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். உடனடியாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் மழை:
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து விடிய விடிய மிதமான கொட்டியது. குறிப்பாக கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் மிதமானபெய்தது. தற்போது வரையில் கருமேகங்கள் கூடியிருப்பதால் சென்னை மாநகர் முழுவதும் இன்னும் இரவு நேரம் போன்றே காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில், மழைநீர் தேங்கியுள்ளதால் வாக ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேநேரம், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இரவு நேரத்தில் பெய்த இந்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளதது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பதிவானது.
புறநகர் பகுதிகளில் மழை: சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் நிலவுவதோடு, லேசான மழையும் பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலை தொடர்கிறது.