சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை போதியளவு இல்லாததால் நான்கு உள்நாட்டு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 


சென்னை- கோயம்புத்தூர், ஐதராபாத் - சென்னை, கோயம்புத்தூர்- சென்னை ஆகிய வழித்தடங்களில் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் நான்கு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது. நண்பகல் 12.45 மணிக்கு கோவையில் இருந்து சென்னை வரவேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது.


மாலை 3.15 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம், மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானம் உள்ளிட்டவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.