சென்னை பிசியோதெரபி மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி !! டாக்டர் கைது - நடந்தது என்ன ?

Continues below advertisement

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் , கொளத்துார் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில் ,

நான் தனியார் மருத்துவ கல்லுாரியில் பிசியோதெரபி படித்து வருகிறேன். பகுதி நேரமாக பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வருகிறேன். மருத்துவமனை உரிமையாளரான பெரவள்ளூரைச் சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் கார்த்திக் ( வயது 27 ) என்பவர் கொளத்துாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணுக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என நேற்று முன்தினம் என்னை அழைத்துச் சென்றார்.

Continues below advertisement

அங்கு அவர் தந்த குளிர்பானத்தை குடித்ததும் நான் மயங்கினேன். விழித்து பார்த்த போது கார்த்திக் என்னிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரித்த போலீசார், கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 70 லட்ச ரூபாய், தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

சென்னை தண்டையார்பேட்டை வைத்திநாதன் பாலம் அணுகு சாலை அருகே கொருக்குப்பேட்டை போலீசார் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கையில் பைகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நால்வரிடம் விசாரித்தனர். அவர்கள் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டி, தப்பிக்க முயன்றனர். போலீசார் மடக்கி பிடித்து, பையை சோதனை செய்தனர்.

அதில் செய்தித் தாள்களால் சுற்றப்பட்ட, 500 ரூபாய் கட்டுகளாக, 70 லட்ச ரூபாய், 13.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி நகைகள் இருந்தன. விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த அமர்தலரு வெங்கட சுரேஷ்பாபு ( வயது 68 ) பொன்னுரு வெங்கட கமல் ( வயது 35 ) துர்கி கோபி கிஷோர் ( வயது 60 ) பதான் பசியுல்லா கான் ( வயது 52 ) என்பது தெரிய வந்தது. போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் , நெல்லுார் பெரிய மார்க்கெட்டில் நகைக்கடை வைத்துள்ள ஷ்ரேனியஸ் என்பவர், அமர்தலரு வெங்கட சுரேஷ்பாபுவிடம் சென்னை பிராட்வேயில் உள்ள அவருடைய தம்பி அதுல்பாயி என்பவரிடம் 60.70 லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை கொடுக்க வேண்டும் எனவும், அதற்கு, 9.50 லட்சம் ரூபாய் 'கமிஷன்' கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தன் நண்பர்கள் மூவரையும் அழைத்து கொண்டு அமர்தலரு வெங்கட சுரேஷ்பாபு சென்னை வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, மத்திய வருமான வரித்துறை அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.