கரூர் அரசியலில் செந்தில் பாலாஜிக்கு எதிராக செந்தில் நாதனை களம் இறக்கிய பாஜக
அதற்கு பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலரை இருவரும் தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். மேலும் தான் திமுகவை சேர்ந்தவர் என மிரட்டியும் உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது காவலரை தாக்கியுள்ளனர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த மற்றொரு காவலர் சமாதானம் செய்து அனுப்பினார். பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பினர். இது தொடர்பாக பெண் காவலர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரும் அளித்தார். பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், தன்னிச்சையாக காயப்படுத்தும் செயல் புரிதல், பணிசெய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இலங்கையில் இந்திய மஞ்சளுக்கு கடும் கிராக்கி - மஞ்சள் கடத்த முயன்ற 5பேர் ராமநாதபுரத்தில் கைது
முதற்கட்ட விசாரணையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சதீஷ் மற்றும் விவேக்பாபு என்பது தெரியவந்தது. இது தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரை திமுகவினர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.