தீபாவளி சீட்டு - 25 நபர்களை மோசடி செய்த பெண்

Continues below advertisement

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பத்மாவதி ( வயது 44 ) இவர் கடந்தாண்டு பவர்ஹவுஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்தார். அந்த ஹோட்டலின் உரிமையாளரான கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தமிழ்செல்வி, தீபாவளி சீட்டு நடத்துவதாக பத்மாவதியிடம் கூறியதோடு , ஆள்சேர்த்து விடவும் கூறியுள்ளார்.

அதை நம்பி, பத்மாவதியும் அவருக்கு தெரிந்த 25 பேரை, தீபாவளி சீட்டில் சேர்த்து விட்டார். அதன்படி, 2024 - ம் ஆண்டு துவக்கம் முதல் ஐந்து லட்சம் ரூபாயை தமிழ்செல்வி வசூலித்துள்ளார்.

Continues below advertisement

சீட்டு முடிந்த நிலையில், முதிர்வு தொகையை தராமல் தமிழ்செல்வி இழுத்தடித்து வந்துள்ளார். இது குறித்து 2024 அக்டோபர் 24 - ம் தேதி, ஆர். கே.நகர் நகர் போலீசில், பத்மாவதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, வழக்கில் தொடர்புடைய தமிழ்செல்வி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், முன்ஜாமின் கோரி மனு செய்துள்ளார்.

பின், நீதிமன்ற உத்தரவின்படி 1 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யாமலும், நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமலும், தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் , இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, தனியார் பயணியர் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணியரை, சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணியர், மலேஷியாவிற்கு சுற்றுலா சென்று, சென்னை திரும்பியது தெரிந்தது. சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்தனர்.

தொடர்ந்து, அவர்களின் உடைமையை சோதனை செய்த போது, இரண்டு பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றை திறந்து பார்த்த போது, அதில் 820 கிராம், 24 காரட் தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு, ஒரு கோடி ரூபாய். அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த பயணியர் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

அதே போல், தினங்களுக்கு முன், தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, ஏர் ஏசியா பயணியர் விமானத்தில் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று திரும்பிய ஆண் பயணியிடம் இருந்து, 750 கிராம் எடையுள்ள துாய தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு 90 லட்சம் ரூபாய். அதையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.