சென்னை தலைநகரம் பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை தருவதால் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த, பொதுமக்கள் பணி நிமித்தமாக சென்னையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். வெளி மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் விடுமுறை நாட்கள் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களின்போது தங்களது சொந்த ஊரை நோக்கி படையெடுப்பது வழக்கமாக உள்ளது.


தீபாவளி பண்டிகை


தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காக பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் என்ன ?


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை. கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.


மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் பேருந்துகள்?


பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.


கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் பேருந்துகள் ?


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்


நெரிசலை தவிர்க்க என்ன செய்வது ?


வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு கார்களில் செல்லும் பொது மக்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து (OMR) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


எந்த நேரத்தில் செல்லலாம் ?


31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் 30 ஆம் தேதி வேலை நாட்களாக உள்ளது. எனவே தீபாவளிக்கு செல்பவர்கள் அனைவரும் 30 ஆம் தேதி மாலை நேரத்தில் படையெடுத்த வாய்ப்புள்ளது. எனவே முடிந்தவரை பயணத்தை 30 தேதி காலையில் மேற்கொண்டால், போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. 30ஆம் தேதி விடுமுறை கிடைத்தால், 29ஆம் தேதி இரவே சென்றால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க அதிக வாய்ப்புள்ளது .