சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் இன்று பகல் 1:30 மணி அளவில்  தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்டு, தாம்பரம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்த ரயில் வழக்கமாக தாம்பரத்திற்கு நான்காவது பிளாட்பாரத்தில் வரும்.  எனவே சானடோரியம்- தாம்பரம் இடையே அந்த ரயில் ட்ராக் மாறும் இடத்தில் திடீரென பழுதடைந்து நின்று விட்டது. நீண்ட நேரம் ஆகியும் ரயில் புறப்படவில்லை. பயணிகள் கேட்டபோது ரயில் இப்போது புறப்படாது தாமதமாகும் என்று கூறினார்கள்.

 

இதை அடுத்து சில பயணிகள் அந்த ரயிலில் இருந்து கீழே குதித்து தாம்பரத்துக்கு நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் வயதானவர்கள், பெண்கள் உட்பட பெரும்பான்மையான பயணிகள்  ரயிலிலே உட்கார்ந்து இருக்கின்றனர். இதற்கு இடையே அதற்குப் பின்னால் வந்த  சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு-  அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் எட்டாவது பிளாட்பாரத்திற்கு இயக்கப்பட்டது. அதைப்போல் தாம்பரம் கடற்கரை இடையே வழக்கமாக 1,2,3,4  பிளாட்பாரங்களில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படும். ஆனால் தற்போது 5,6,7,8  பிளாட்பாரங்களில் இருந்து இயக்கப்படுகிறது. 



 

இந்த சென்னை கடற்கரை செங்கல்பட்டு மின்சார ரயில்  என்ன காரணத்தால் பழுதடைந்து நிற்கிறது?  என்று எந்த தகவலும் ரயில்வே அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் ரயில் பழுதடைந்து விட்டது. அதை சீர் செய்ய நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறோம், விரைவில் அது சீராகிவிடும் என்று கூறுகின்றனர்.  இதனால் சென்னை கடற்கரை செங்கல்பட்டு மின்சார ரயில் பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் அவதி அடைந்து வருகின்றனர்

 



 

 

மற்றொரு சம்பவமாக காஞ்சிபுரத்தில் இருந்து செல்லும் ரயில்கள் பாதிப்பு.. பயணிகள் தவிப்பு..

 

காஞ்சிபுரத்தை அடுத்த திருமால்பூரில், இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாக தினந்தோறும் பத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. Bஇந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல திருமால்பூரில்  இருந்து வழக்கமாக 7.00 மணி அளவில் புறப்படும் ரயிலானது புறப்பட்டு கூரம் அருகே வந்து கொண்டிருந்தபோது பேண்டோ கிராப்  ( pantograph) பழுதின் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நின்றது.

 

இதனால் காஞ்சிபுரம் புதிய மற்றும் பழைய இரயிலிவே நிலையங்களுக்கு 7.20 மணிக்கு வரக்கூடிய இரயில்காக மணிக்கணக்கில் காத்திருந்த இரயில் பயணிகள் கோபமடைந்து, இரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் 9.30 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து புறப்படக்கூடிய இரயில் மூலம் 8.50மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ரெயிலானது புறப்பட்ட சற்று நேரத்திலையே  திருமால்பூரிலிருந்து 7.00-க்கு புறப்பட்ட இரயிலானது சுமார் 8.55மணிக்கு காஞ்சிபுரம் புதிய ரெயில்வே வந்தடைந்தது .

 

அதனை 9.30 மணிக்கு இயக்கிட அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றியமைந்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் நிலைய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தான் பணிகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படுவதாக கூறிய நிலையில் இரயில்வே நிலைய ஸ்டேஷன் மேனேஜர் பயணிகளிடம் அதிகார பாணியிலும், தரக்குறைவாகவும் பேசிய நிலையில், இதற்கு இரயில் பயணிகள் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ரயில்கள் தாமதமாக சென்றன.