சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவசரப் போக்குவரத்திற்கு (ஆம்புலன்ஸ், அத்தியாவசிய பொருட்கள் சேவை உள்ளிட்டவை) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற போக்குவரத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இதுமட்டுமின்றி, மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ஏற்கனவே பூங்காக்கள், விளையாட்டுப்பூங்காக்களை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தீவிர புயல் வலுவிழந்து புயலாக மாறியுள்ளது.

Continues below advertisement

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையும் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வருகிறது. சென்னையில் மழை விட்டு, விட்டு பெய்து வரும் நிலையில் மாமல்லபுரத்தில் நாளை அதிகாலை புயல் கரையை கடக்க உள்ளது.

இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும், அவசர மற்றும் அத்தியாவசிய பேருந்து சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாண்டஸ் புயல் காரணமாக ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சென்னைக்கு நீர் வழங்கும் பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: Chennai Rains: கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மழை அளவு எவ்வளவு? நுங்கம்பாக்கத்தில் அதிகம்!

மேலும் படிக்க: Cyclone Mandous: மெல்ல மெல்ல நகரும் மாண்டஸ் புயல்.. தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழப்பு!