கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்த வருடத்திற்கான தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது, இந்த விழா "ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்" எனும் வாக்கியத்தினை மையமாக கொண்டு அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கடலூரில் அதனை கொண்டாடுவதற்கு என அங்கன்வாடி சிறுவர்கள் மற்றும் விழிப்புணர்வு பேரணிக்கு என அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதன்படி அவர்கள் அனைவரும் காலை 7 மணி அளவிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வர நேரம் ஆனதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள சாலை மரத்தடியிலும், ஆட்சியர் அலுவலக வாசலில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்து காத்து கொண்டிருந்ததை காண முடிந்தது.
இதுமட்டும் இன்றி பேரணிக்கு வந்து இருந்தவர்கள் ஒரு சிலர் வயது முதிர்ந்தவர்கள் என்பதால் வெகு நேரம் காத்திருந்த காரணத்தினால் ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள புற்களில் படுத்து உறங்க தொடங்கினர். பின் அழைத்து வரப்பட்ட சிறுவர்கள் முகாக்கவசம் அணியாமல் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டமாக அமர வைக்கப்பட்டிருந்தனர். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பொது வெளியில் குழந்தைகளுக்கு முகக்கவசம் கூட அணியாமல் அமரவைத்திருப்பது வருத்தத்திற்குரியதாகும் பின் நான்கு மணி நேரத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வந்து விழாவினை தொடங்கி வைத்தார்.
இதில் போஷன் உறுதிமொழி என பல உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் வலியுறுத்தப்பட்டது அவை, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையை அடைய நான் இன்று உறுதிமொழி ஏற்கின்றேன். ஊட்டச்சத்து குறித்த இருவார நிகழ்வுகளின் போது ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பத்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதை நான் உறுதி செய்வேன். ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான ஆரோக்கிய உணவு, தூய்மையான குடிநீர், சுகாதாரம் தாய்மை மற்றும் பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான சரியான உணவு ஊட்டும் பழக்க வழக்கங்களில் உள்ளது. தேசிய ஊட்டச்சத்து இயக்கம் நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற ஒவ்வொரு வீடு, கிராமம் ஒவ்வொரு நகரமும் சம்பந்தமன கருத்துக்களை அறிய நான் உதவுவேன்.
இந்த மக்கள் பேரியக்கத்தின் குணம் எனது நாட்டிலுள்ள எனது சகோதரிகள் சகோதரர்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாகவும் திறமையானவர்களாகவும் உருவெடுப்பர். இது என் உறுதி மொழி ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான தேசமாகும் என கூறினார். இவ்வாறு வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் சரியான நேரத்தில் எங்களை அழைத்தால் தாங்கள் இவ்வாறு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது என வருத்தம் தெரிவித்தனர்.