பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படையிலே 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ஆம் ஆண்டு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின் முடிவில் சாந்தன், நளினி, முருகன் மற்றும் பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் 2000-ஆம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் 2014-ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
அதேநேரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ஆம் ஆண்டு பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மே 18-ஆம் தேதி அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது போலவே நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
செங்கொடி
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி ஆகத்து 28, 2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார். காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து தமிழுணர்வுப் போராட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார்.Nகாஞ்சிபுரத் தில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். அன்று மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பலியானார்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மேல்கதிர்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள செங்கொடியூர் மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவிடத்தில், பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், ”முதலாளாக கடந்த மே 18ஆம் தேதி விடுதலையான 7 பேரில் ஒருவர் மட்டுமே விடுதலை குறித்து கசப்பான அனுபவத்தோடு விடுதலையானது நினைத்து வருத்தத்துடன் வெளி வந்ததாகவும், இன்று தன்னுடன் சேர்ந்த மற்ற ஆறு பேரும் விடுதலை செய்ததை பெரிய மகிழ்ச்சியாகவும், தெரிவித்தார். எங்களுக்காகவும் எங்களின் தூக்கு தண்டனை நிறுத்த வேண்டி வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உதவியாக இருந்து, 15 ஆண்டுகளாக எங்களுக்காக போராடி இந்த தீர்ப்பினை பெற்று தந்தது. விடுதலை அறிவிப்பை கேட்டவுடன் பெரு மகிழ்ச்சியுடனும், இன்று தான் எங்களுக்கு உரிய நீதியைப் பெற்றதாக” தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்