தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நாளை முதல் ரெம்டெசிவர் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் மருந்துகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் மருந்துகள் பெற ஸ்டேடியத்திற்கு வர வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து வாங்க கூட்டம் தினமும் கூடி வந்ததால், நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் மருந்து வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கும் கடந்த இரண்டு நாட்களாக மருந்துகள் வாங்க அதிகம் கூட்டம் கூடி அதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு  ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, ரெம்டெசிவர் மருந்து நாளை தனியார் மருத்துவமனைகளில் வழங்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ரெம்டெசிவர் மருந்துகள் வாங்க யாரும் நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல் செய்தி :#chennaicitypolice #greaterchennaipolice#chennaipolice pic.twitter.com/HbNaxW2o83
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) May 17, 2021

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் நேற்று (மே 16) கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் நோயாளிகளின் உறவினர்கள் மருந்துகள் பெற சிரமப்படுவதை போக்க கொரோனா தொற்று நோயாளிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலேயே ரெம்டெசிவர் மருந்துகள் நாளை முதல் கிடைக்க தமிழக அரசால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரெம்டெசிவர் மருந்துகள் தேவைப்படுவோர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அணுக அறிவுறுத்தப்படுகிறது. கடந்த 15ஆம் தேதி முதல் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்துகள் இன்று முதல் வழங்கப்படமாட்டாது. எனவே பொதுமக்கள் யாரும்  நேரு ஸ்டேடியத்திற்கு ரெம்டெசிவர் மருந்துகளை வாங்க வரவேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.