இதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 631 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 248 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 841 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 76 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 45 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்த 838 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 243 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 67 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 770 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 540 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 162 நபர்கள் கொரோனா பாதிப்பிற்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 204 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 588 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 136 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 460 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 833 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில் 182 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 60 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்துள்ளனர். 657 பேர் இந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில் 99 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணா நகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 620 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 954 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 198 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 798 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 946 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 210 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 594 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 929 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 185 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 34 ஆயிரத்து 999 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 450 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 110 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 141 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 366 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 102 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 43 ஆயிரத்து 955 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 662 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 185 நபர்கள் கொரோனா பாதிப்பினால் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 960 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், 333 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 110 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 108 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், 136 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.