Chennai Metro Rail: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,063.37 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கி.மீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் மையமாக இருக்கும் நிலையில், இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையாக இருக்கும். ஓம்எம்ஆர் சாலையில் மெட்ரோ பணிகள் முடிந்து 2027ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
2ஆம் கட்ட மெட்ரோ பணிக்காக சுமார் ரூ.61,843 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. மாதவரம்-சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மொத்தம் 118 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.1,063.37 கோடி ஒப்பந்தம்
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3ல் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்காக தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு ரூ.1063.37 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் JICA நிதியுதவியின் ஒருபகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு 02.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் நிலையம் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பால்பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
மூலங்கடை டூ மாதவரம் நெடுஞ்சாலை
சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் முன்னிலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் தினேஷ்சந்திர சோமா கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரணவ் குமார் தொழில்நுட்பம்) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), கூடுதல் பொது மேலாளர் டி.குருநாத் ரெட்டி (ஒப்பந்த கொள்முதல்), இணை பொது மேலாளர் ரீபு டாமன் துபே (சுரங்கப்பாதை) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தினேஷசந்திர சோமா கூட்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க