கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், பொதுக்குழுவின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.


இந்நிலையில், முன்னதாக ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து பொதுக்குழுவை கூட்டலாம் என்றும், ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானமும் இக்கூட்டட்த்தில் நிறைவேற்றப்படக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக அதிமுக செயற்குழு, பொதுக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.


அதில், கட்சி பொதுக்குழு கூட்டத்தில், உயர் நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்தது, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றியது, ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கையெழுத்திட்டு ஒப்படைத்தது, ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் கூடும் என அறிவித்தது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பு செயல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மனு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் மீண்டும் பொதுக்குழுவை நடத்த அதிமுக முடிவு செய்துள்ளதாக முன்னதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே முன்னதாக எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவுக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, எடப்பாடி பழனிசாமியும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரை சந்திக்க வந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்காமல் அவர் திருப்பியனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண