சென்னை மாதவரத்தில் தெருவில் கழிவுநீர் சுத்தம் செய்த நெல்சன் என்பவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். 


பாதாளச் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பினை சுத்தம் செய்ய  சென்ற நெல்சன் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதற்குள் நெல்சன் உயிரிழக்கவே, அவரது உடலை, தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இவர் ஒப்பந்த தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.  நெல்சனுடன் பணிக்குச் சென்ற ரவிக்குமார் என்பவரையும் விஷ வாயு தாக்கியுள்ளது. இதனால் மயக்கமடைந்த ரவிக்குமாரினை தீயணைப்புத் துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


சென்னை மாநகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதி மாதவரம். இது திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் உள்ளது. இங்கு இன்று (28/06/2022) மாலை நடந்த ஒரு துயரச் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பாதளச்சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய சென்றபோது துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 


அடைப்பினைச் சரி செய்ய, பாதாளச் சாக்கடையின் மூடியினைத் திறந்த நெல்சனை விஷவாயு தாக்கியது. இதனால் மயங்கி சாக்கடையின் உள்ளே விழுந்தார்.  பயந்து போன ரவிக்குமார் அவரை மீட்க முயற்சி செய்த போது, அவரையும் விஷவாயு தாக்கியது. மயங்கிய ரவிக்குமாரைப் பார்த்த பொது மக்கள், காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னர், நெல்சன் இறந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த  ரவிக்குமாரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இறந்த நெல்சனின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் துணை ஆய்வாளர் ராஜாராம் மற்றும் உதவி கமிஷ்னர் ஆதிமூலம் ஆகியோர், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இறந்துபோன நெல்சன் இருபத்து ஆறே வயதானவர் என்றும்,  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் இங்கு தங்கி வேலை பார்ப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஷவாயு தாக்கி உயிர் இழப்பு எனும் அவலநிலையும் தொடர்ந்து வருகிறது என, வருத்தத்தோடும் தெரிவித்துவருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண