தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஞாயிற்று கிழமை, அரசு சார்பில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு:
சென்னை, கிண்டியில் கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணி நடைபெற்று வருவது குறித்து, அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, மணப்பாக்கம், கெருகம்பாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் உட்புறச் சாலைப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால் பணிகளில் ஆய்வு:
இதையடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலைகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அவருடன் தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோரும் இருந்தனர்.