44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் முதல்முறையாக வரும் 28ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தமிழகத்தில் தமிழக அரசின் பிரம்மாண்ட ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம்-கோனேரிக்குப்பம் அருகே H.S அவென்யூ,அம்மா பூங்காவில் ஒருங்கிணைந்த அண்ணாநகர் குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் சதுரங்கப் போட்டியை காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்க்கொடி குமார் செஸ் விளையாடி சதுரங்க போட்டியினை துவக்கி வைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற செஸ் விளையாட்டுப் போட்டியில் 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்றனர்.
பின்னர் சதுரங்க போட்டியில் பங்கேற்ற அனைத்து சிறுவர் சிறுமியர்களுக்கும் செஸ் விளையாட்டை ஊக்கபடுத்தும் வகையில் புதிய சதுரங்க பலகைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் பானுப்பிரியா சிலம்பரசன், இலக்கியா சுகுமார், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த அறிஞர் அண்ணா நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் M. பாஸ்கரன், செயலாளர் S. ஆறுமுகம், பொருளாளர் E. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்