சென்னை மாமல்லபுரம் 44வது ஒலிம்பிக் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் இடையே இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் தமிழகத்தில் கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டு சேர்க்கும் வண்ணம், கலை நிகழ்ச்சிக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் வீர கலையான சிலம்பம், பரதநாட்டியம் ஆகியவை இந்த கலை நிகழ்ச்சியில் இடம்பெற்று இருந்தது. இந்த கலை நிகழ்ச்சி இந்தியன ராக்ஸ் என்ற பெயரில் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியை காணுவதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அவரது துர்கா ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.



 

கலை நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது தூரல் சிறிதளவு தூரிக் கொண்டிருந்தது. அப்பொழுது தமிழக முதலமைச்சர் குடை பிடித்தபடி, காபி குடித்துக் கொண்டே, மேடையில் கலை நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார். இதேபோல அந்த குவிந்து இருந்த ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களும் கலை நிகழ்ச்சி ரசித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் காபி குடித்துக்கொண்டே கலை நிகழ்ச்சியை ரசிக்கும் காட்சிகள் இளையதளத்தில் வைரலாக பரவுகிறது.



 

நேற்று ஏழாவது சுற்று போட்டி

 

 

செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா-3 அணியுடன் மோதிய இந்தியா-1 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்தியா-3 அணிக்காக களமிறங்கிய அபிஜீத் குப்தா, புரானிக் அபிமன்யுவுக்கு எதிராக இந்தியா-1 அணி சார்பில் எரிகைசி அர்ஜுன், எஸ்.எல். நாராயணன் வெற்றிகளைக் குவிக்க, ஹரிகிருஷ்ணா பென்டாலா - சூரியசேகர் கங்குலி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி - சேதுராமன் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

 



 

கியூபாவை வீழ்த்தியது இந்தியா-2, 7வது சுற்றில் கியூபா அணியுடன் நேற்று மோதிய இந்தியா-3 அணி 3.5க்கு .5 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது. இந்தியா-3 சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, சரின் நிஹல் வெற்றி பெற்று தலா 1 புள்ளி பெற்ற நிலையில், கியூபாவின் அல்மெய்டா குவின்டானா ஒமருடன் மோதிய அதிபன் டிரா செய்து அரை புள்ளி பெற்றார். குகேஷ் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பெற்று அசத்தினார். மகளிர் பிரிவு 7வது சுற்றில் களமிறங்கிய இந்தியா-1 அணி 2.5 - 1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.



 

இந்திய வீராங்கனைகள் டானியா சச்தேவ், வைஷாலி வெற்றி பெற்ற நிலையில் கோனெரு ஹம்பி அதிர்ச்சி தோல்வி கண்டார். ஹரிகா - பாலஜெயேவா கானிம் மோதிய ஆட்டம் டிரா ஆனது. கிரீஸ் அணியுடன் மோதிய இந்தியா-2 மகளிர் அணி 1.5 - 2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது. மற்றொரு மகளிர் 7வது சுற்று போட்டியில் இந்தியா-3 அணி 3-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வென்றது. ஈஷா, நந்திதா வெற்றியைப் பதிவு செய்ய, பிரத்யுஷா, விஷ்வா வஸ்னவாலா டிரா செய்தனர்.