காஞ்சிபுரம் மாவட்டத்தில்  பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்தன. இதில் ஏகனாபுரம் கிராம குடியிருப்பு பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளதாக வெளியான வரைபடத்தை கண்டு அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஏகனாபுரம் கிராம மக்கள் 200 பேர் திரளாக வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கிராம மக்கள் கூறுவதாவது..

 

பரந்தூர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் தெரிவித்தன .12 கிராமங்களை சேர்ந்த பகுதிகள் உள்ளடக்கியதாக வரைபடம் வெளியானது. அதில் 11 கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை தவிர்த்து மற்ற பகுதியில் விமான நிலையம் அமைய  உள்ளன. ஆனால் ஏகநாபுரம் கிராமம் மட்டும் குடியிருப்பு பகுதி முழுவதும் விமானம் அமைய உள்ளதாக தெரிய வருகிறது .



இதன் காரணமாக நாங்கள் சிறு குறு  நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் அவர்களை சந்தித்து எங்கள் பகுதியில்  சுமார் 600 குடும்பத்தைச் சேர்ந்த 2500  பேர் வசித்து வருகிறார்கள். காலம் காலமாக நாங்கள் வசித்து வரும் நிலையில் எங்கள் குடியிருப்பு பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என கூறியதாகவும் , உங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி  பரிசீலனை செய்வதாக  அமைச்சர் தெரிவித்தார் .



இதனை அடுத்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் நாங்கள் மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியரும் தற்பொழுது வெளியாகி உள்ளது பழைய வரைபடம் எனவே தமிழக அரசு எல்லைகளை வரையறுத்து பின்னர் நாங்கள் உங்கள் பகுதிக்கு வந்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி உங்களை சந்திப்போம். உங்கள் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் விமான அமைக்க ஆவண செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கிராம மக்கள் கூறினர். ஏகனாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிள் பாடி, எடையார்பாக்கம், அக்கம்மாபுரம் ,பரந்தூர், நெல்வாய், பொடவூர், நாகப்பட்டு ,தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைய உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

 

1998 ஆண்டு தொடங்கிய சென்னை இரண்டாம் விமானம் நிலையம் பேச்சு .. கடந்து வந்த பாதை இதுதான்..!


விமான நிலையம் எங்கு அமைய போகிறது என தகவல் வெளியாகி உள்ள நிலையில், கடந்து வந்த பாதையை கொஞ்சம் டைம் டிராவல் செய்து பார்க்கலாம்.


1998 ஏப்ரல் மாதம் மத்திய விமான துறை அமைச்சர் ஆனந்தகுமார் சென்னைக்கு இரண்டாவது ஏர்போர்ட் தேவைப்படுகிறது என முன்மொழிந்தார்.


1998 அக்டோபர் மாதம் சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக  முதல் உயர்மட்ட குழு கூட்டமானது நடைபெற்றது. இதில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.


1998 அக்டோபர் மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர்  கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்கு, சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக  பணிகளை முன்மொழிவுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்


1998 அக்டோபர் மாதம், தமிழ்நாடு  தொழில் வளர்ச்சி துறை ஆணையம் ,  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்  தெற்கு பகுதில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இடம் ஒன்றை தேர்வு செய்தனர்.

1999 நவம்பர் மாதம் 2000 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


2000 நவம்பர் மாதம் போரூர் அருகில் மேற்கு மீனம்பாக்கத்தில்  3000 ஏக்கரில் , அமைய உள்ளதாக தகவல்  வெளியானது.

2005 ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் வடக்கே, சுமார் 1457 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது .


2007 மே மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர்  கருணாநிதி ,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே  4820 ஏக்கர் பரப்பளவில், பசுமை விமானம்  நிலையம் அமைக்க முடிவு செய்தார்.


2012 மார்ச் மாதம்  சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 20 ஆயிரம் கோடி ஆகும் என தமிழ்நாடு அரசு  திட்டம் தீட்டியது.


2022 ஜனவரி மாதம் தமிழ் நாட்டில்  4 இடங்கள் தேர்வு செய்தனர். படாளம், திருப்போரூர் , பன்ணுர் ,பரந்தூர் ஆகிய இடங்களை தேர்வு செய்தனர்.


2022 மார்ச் மாதம்  அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வு  மேற்கொண்டனர்.


2022 ஆகஸ்ட் மாதம் சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என்று ராஜ்யசபாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.