சென்னை, பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி விற்பனை செய்து வருகிறது. அதன் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் புதிய கட்டிடத்திற்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என அப்புகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(70) என்பவரிடம் கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ராஜேந்திரன் திருஷ்டி கழிப்பதற்காக ஊதுபத்தி, சூடாகப், பூசணிக்காய், உயிருள்ள கோழி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, அந்த புதிய கட்டிடத்துக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கையில் இருந்த கோழி பறந்து சென்றது அதை பிடிக்க துரத்தியபோது கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்தார். அப்பொழுது கோழி அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
இதில், கீழ விழுந்த ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த ராஜேந்திரன் உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வெங்கடேஸ்வரா நகர் 2வது தெருவில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று புதுமனை புகுவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு திருஷ்டி கழிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில், ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திருஷ்டி கழிப்பதற்காக ஊதுபத்தி, சூடம், பூசணிக்காய், கோழி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, அந்த புதிய கட்டிடத்துக்கு சென்றார். அப்போது, அந்த கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்