Chennai Wonderla: சென்னைக்கு புது அடையாளம்.. நியூயார்க்குக்கு இணையான தீம் பார்க்.. திறப்பு விழா எப்போது ?

chennai wonderla opening date: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில், ஒண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது.

Continues below advertisement

Chennai Wonderla Theme Park: இந்தியாவிலே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் சென்னை அருகே அமைய உள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

வொண்டர்லா தீம் பார்க் (Wonderla Amusement Park)  

ஒரு நாள் முழுவதும் பொழுதுபோக்காக செலவழிக்க வேண்டும், அதுவும் பாதுகாப்பாகவும் பல்வேறு திரில்லிங் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை, பொழுதுபோக்கு பூங்காக்கள் கொடுத்து வருகின்றன. மேலை நாடுகளில் தொடங்கி, வளரும் நாடுகளாக இருக்கக்கூடிய இந்தியாவில் பொழுதுபோக்கு பூங்கா என்பது மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமாக, வொண்டர்லா (Wonderla Amusement Park) தீம் பார்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வொண்டர்லா தீம் பார்க் செயல்படவில்லை என்றாலும், பெங்களூருக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் படையெடுக்கின்றனர். 

தமிழ்நாட்டில் வொண்டர்லா தீம் பார்க்

இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வொண்டர்லா தீம் பார்க் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசுடன் இணைந்து போடப்பட்டது. பல்வேறு நிர்வாக சிக்கல் காரணமாக தொடர்ந்து, வொண்டர்லா தீம் பார்க் அமைப்பதற்கான பணிகள் தாமதம் ஆகி வந்தன. இந்தநிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அதற்கான நடவடிக்கையில் இறங்கின.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் தீம் பார்க் அமைக்கும் நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறைப்படி ( Single Window System) அனுமதி வழங்கப்படும் என கொள்கையை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் டிஸ்னி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ போன்ற உலக அளவில் இருக்கும் மிக முன்னணி, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தீம் பார்க்களை சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அமைப்பதற்கான நடவடிக்கையில் தமிழக சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features 

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தனது 5-வது கிளையை தமிழ்நாட்டில் வொண்டர்லா நிறுவனம் தொடங்க உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில், உள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் என்ற பகுதியில் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைய உள்ளது. இந்த பொழுதுபோக்கு பூங்கா 62 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை புறநகர் பகுதியில் இந்த பொழுது பூங்கா பிரம்மாண்டமாக அமைய உள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பிடித்த சுவாரசிய விளையாட்டுகளை மையமாக வைத்து இந்த பொழுது போக்கு பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster

வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு, அனைத்துவித பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது. இந்த ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு, 80 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திறப்பு விழா எப்போது ?

இந்த பொழுதுபோக்கு பூங்காவில் முக்கிய அம்சமான ரோலர் கோஸ்டர் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று மற்ற விளையாட்டுப் பொருட்கள் சாதனங்கள் அனைத்தும் இறக்கப்பட்டு, அவை பொருத்தும் படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே வேளையில் முடிவடைந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதியும் அளித்து வருகின்றனர். மிகவும் வேகமாக வேலைகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முன்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் நடைபெற்ற வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Continues below advertisement
Sponsored Links by Taboola