சமீப காலமாக மக்களிடையே சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. புதிதாக தொடங்கப் போதும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு, பொது மக்களின் ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Continues below advertisement

வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா : Wonderla Amusement Park 

இந்தியாவில் முன்னணி பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாக, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வொண்டர்லா பொழுதுபோக்கு நிறுவனம் இந்தியாவில் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. வொண்டர்லா பொழுதுபோக்கு தமிழகத்தில் செயல்படவில்லை என்றாலும், அருகில் இருக்கும் பெங்களூருக்கு பொதுமக்கள் படையெடுப்பது கடந்து சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. இதனால் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவை தமிழ்நாட்டில் கொண்டுவர பல்வேறு நடவடிக்கையில் இறங்கியது.

சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா - Chennai Wonderla Amusement Park

ஆரம்ப கட்டத்தில் அந்த நிறுவனம் எடுத்த முயற்சிகள் பல்வேறு சூழல் காரணமாக நிறைவேறாமல் இருந்து வந்தன. இந்தநிலையில் வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் பொழுதுபோக்கு பூங்காவை அமைத்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட, பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR Road) இள்ளளூரில் (திருப்போரூர் அருகே) என்ற பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக, பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது. இந்த வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா சுமார் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

Continues below advertisement

இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster

சென்னையில் அமைய உள்ள இந்தப் பூங்காவில், உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் ரோலர் கோஸ்டர் அமைய உள்ளது. இந்த ரோலர் போஸ்டர் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக அமைய உள்ளது குறிப்பிட்டது. லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று, பிரம்மாண்டமான ரோலர் கோஸ்டர் சென்னையில் அமைய உள்ளது. இதற்காக மட்டும் சுமார் 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெறும் சவாரிகள் என்னென்ன? What are the Rides in Chennai Wonderla?

இந்த வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் மொத்தம் 42 சவாரிகள் (42 Rides) இடம் பெற உள்ளன. இவற்றில் 16 சவாரிகள் நீர் சவாரிகளாக (16 water rides) அமைய உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா எப்போது? Chennai Wonderla Theme Park Opening Date 

இந்தநிலையில் இந்த பொழுதுபோக்கு பூங்கா வருகின்ற டிசம்பர் மாதம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர்களில் ஒருவரான அருண் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் " சென்னை திட்டம் விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இந்த உயர் தொழில்நுட்ப பூங்காவை 25 மாதங்களில் கட்டியதற்காக எனது நுழைவு குழுவிற்கு நன்றி " என தெரிவித்துள்ளார். திறப்பு விழா டிசம்பர் மாதம் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்றாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையை மனதில் வைத்து டிசம்பர் மாதமே செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.